歌词
யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
குளிராலும் கொஞ்சம் அணலாலும்
பின்பு நெருக்கம் தான் கொல்லுதே
எந்தன் ஆறானது இன்று வேரானது
வண்ணம் நூறானது வானிலே...
யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
·· இசை ··
தீர தீர ஆசையாவும் பேசலாம்
மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிர்க்கலாம்
என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்
இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொல்லலாம்
என்னாகிறேன் இன்று ஏதாகிறேன்
எதிர் காற்றிலே சாயும் குடையாகிறேன்
எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது
அது பறந்தோடுது வானிலே...
யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
·· இசை ··
மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே
அது மலையை விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே
வைரம் போல பெண்ணின் மனது உலகிலே
அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே
கண்ஜாடையில் உன்னை அறிந்தேனடி
என் பாதையில் இன்று உன் காலடி
நேற்று நான் பார்த்ததும் இன்று நீ பார்த்ததும்
நெஞ்சம் எதிர் பார்த்ததும் ஏனடி
யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
குளிராலும் கொஞ்சம் அணலாலும்
பின்பு நெருக்கம் தான் கொல்லுதே
எந்தன் ஆறானது இன்று வேறானது
வண்ணம் நூறானது வானிலே...
......
专辑信息
1.Thalaivaa Thalaivaa
2.Yaar Indha Saalai Oram
3.Vaanganna Vanakkanganna
4.Sol Sol
5.The Ecstacy of Dance
6.Tamil Pasanga