歌词
மாரி மலை முழைஞ்சில்
மன்னிக் கிடந்துறங்கும்
சீரியச் சிங்கம்
அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர் பொங்க
எப்பாடும் பேர்ந்து தறி
மூரி நிமிர்ந்து
முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ
பூவைப் பூவண்ணா உன்
கோயில் நின்று இங்கனே
போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து
யாம் வந்த
காரியம் ஆராய்ந்து
அருளேலோ ரெம்பாவாய்
காரியம் ஆராய்ந்து
அருளேலோ ரெம்பாவாய்