歌词
இதோ தானாகவே
ஏனோ நீயாகிறேன்
விழி காணாமலே
உனை போல் ஆகிறேன்
இலை வண்ணமாய் மின்னுதே
எனை செல்லமாய் கொல்லுதே
காதல் காதல் தூண்டுதே
பார்வை கண்கள் மீறுதே
ஆதவ பூவோ மாதவ பூவோ உறவா பகையா
காதல் எந்தன் விழிகள் ஆகி அழகே உன்னை பார்க்குதடி
உன் வாசம் எந்தன் வழிகள் ஆகி அருகில் என்னை சேர்க்குதடி
அட காற்று என்னும் குதிரை ஏறி இதயம் மாயம் ஆகுதடி
அடி ஆசையில் உன்னை திருடி செல்ல களவும் நியாயம் ஆகுமடி
♪
முற்றும் துறந்தவள் மோகம் தருபவள் நீ தானோ பெண்ணே
நெற்றி சுடரென நிலவை கோர்தவள் நீயானாயடி
ஒற்றை பூவின் பிரம்மாண்ட காடாய் நீயானாய் பெண்ணே
அற்றை நாளில் அமுதம் வார்த்தவள் நீயோ தானடி
அருகினில் வருதே உயிரினை சுடுதே தோழி உன் நினைவடி
தனிமையை தொலைந்தேன் நிலவினில் தொலைந்தேன் நீயே உறவடி
ஹே காதல் எந்தன் விழிகள் ஆகி அழகே உன்னை பார்க்குதடி