歌词
Paralogame En Sonthame
பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ
என் இன்ப இயேசுவை
என்று காண்பேனோ
வருத்தம் பசி தாகம் மன துயரம் அங்கே இல்லை
விண் கிரீடம் வாஞ்சிப்பேன் விண்ணவர் பாதம் சேர்வேன்
சிலுவையில் அறையுண்டேன் இனி நானல்ல இயேசுவே
அவர் மகிமையே எனது லட்சியமே
இயேசு என் நம்பிக்கையாம் இந்த பூமியும் சொந்தமல்ல
பரிசுத்த சிந்தையுடன் யேசுவை பின்பற்றுவேன்
ஓட்டத்தை ஜெயமுடன் நானும் ஓடிட அருள் செய்வார்
விசுவாச பாதையில் சோராது ஓடிடுவேன்
பரம சுகம் காண்பேன் பரன் தேசம் அதில் சேர்வேன்
இரா பகல் இல்லையே இரட்சகர் வெளிச்சமே
அழைப்பின் சத்தம் கேட்டு நானும் ஆயத்தமாகிடுவேன்
நாட்களும் நெருங்குதே வாஞ்சையும் பெருகுதே
பளிங்கு நதியோரம் சுத்தர் தாகம் தீர்த்திடுவார்
தூதர்கள் பாடிட தூயனை தரிசிப்பேன்