歌曲 / 歌词

06pullum

Listen on Apple Music

歌词

புள்ளும் சிலம்பினகாண்
புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின்
பேரரவம் கேட்டிலையோ?
புள்ளும் சிலம்பினகாண்
புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின்
பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்
பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம்
கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில்
துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு
முனிவர்களும் யோகிகளும்
மெல்ல வெழுந்து
அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து
குளிர்ந்தேலோ ரெம்பாவாய்
உள்ளம் புகுந்து
குளிர்ந்தேலோ ரெம்பாவாய்