歌曲 / 歌词

Nijama Nijama (From "Bose")

Listen on Apple Music

歌词

நிஜமா நிஜமா
இது என்ன நிஜமா
நீ வந்த நொடி நிஜமா
♪
நிஜமா நிஜமா
இது என்ன நிஜமா
நீ வந்த நொடி நிஜமா
நிஜமா நிஜமா
இது என்ன நிஜமா
நீ, நான், நாம் நிஜமா
ஒரு மரம் கொத்தி பறவை
மனம் கொத்தி போகுதே
மழை நின்ற போதும்
மரக்கிளை தூறுதே
பூட்டி வைத்த நெஞ்சில் பூ பூக்குதே
பார்க்கும் போதே கண்கள் பறிபோகுதே
நிஜமா நிஜமா
இது என்ன நிஜமா
நீ வந்த நொடி நிஜமா
நிஜமா நிஜமா
இது என்ன நிஜமா
நீ, நான், நாம் நிஜமா
♪
நேற்று இன்று நாளை என்பதென்ன
காலம் உறைந்து போனதே
நெற்றிப் பொட்டில் கோடி மின்னல் வீச
கடவுளாக தோணுதே
வேற்று கிரகம் போல இன்று எனக்கு
எந்தன் வீடு ஆனதே
வெற்று கோபம் என்ன அர்த்தம் மாறி
வெட்பம் ஆகிப் போனதே
வண்ணத்துப் பூச்சி சிறகால் மோதியே
வானமும் இடிந்தால் அதுதான் காதலே
இடி மின்னல் மழை இந்த மூன்றுமே
இதயத்தில் தந்தால் அது காதலே
நிஜமா நிஜமா
இது என்ன நிஜமா
நீ, நான், நாம் நிஜமா
♪
கோடை வாடை இளவேனில் காலம்
கார்காலம் நான்குமே
காதல் காலம் எந்தக் காலம் என்று
உண்மை சொல்லக் கூடுமோ
கிழக்கு மேற்கு வடக்கோடு தெற்கு
திசைகள் நான்கு யாவுமே
காதல் எந்த திசையில் செல்லும் என்று
கண் சொல்லக் கூடுமோ
கருவறை எனக்கும் இருந்தால் முல்லையே
கடைசி வரைக்கும் சுமப்பேன் உன்னையே
உயிர் அறை ஒன்றை உருவாக்கியா என்
உயிர் உள்ளவரை உன்னை போற்றுவேன்
நிஜமா நிஜமா
இது என்ன நிஜமா
நீ வந்த நொடி நிஜமா