歌曲 / 歌词

Endhan Paruvathin

Listen on Apple Music

歌词

ராதா . ராதா . ராதா . ராதா . ராதா .
ராஜா. ராஜா. ஓ ராஜா.
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ராஜா
நல்ல இதயங்கள் பேசிடும் மொழி என்ன சொல்லடி ராதா
அது ஏட்டிலும் எழுத்திலும் எழுத வராது ராஜா ராஜா ராஜா ஓ...
இரு கரங்களை பிடிப்பதும் மயங்குவதேனடி ராதா ராதா
அதில் காந்தத்தை போல் ஒரு உணர்ச்சி உண்டானது ராஜா ராஜா ஓ ராஜா
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஓ ராஜா
நெஞ்சில் இருவரும் இணைந்தபின் திருமணம் ஏனடி ராதா
அது இளமையின் நாடகம் அரங்கத்தில் வருவது ராஜா ராஜா ராஜா ஓ
முதல் இரவென்று சொல்வது ஏனடி வந்தது ராதா ராதா
அது உரிமையில் இருவரும் அறிமுகம் ஆவது ராஜா ராஜா ஓ ராஜா
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஓ ராஜா