歌曲 / 歌词

Annan Ennada

Listen on Apple Music

歌词

நான் என் தம்பியாகாட்டினு நெனச்சேன்
என் தம்பிக்கு இன்னைக்கு இங்க தான் கல்யாணம்ங்கலாம்
இந்த வேடிக்கைய எங்கயாவது கேள்வி பட்டு இருக்கீங்களா
அண்ணனுக்கு தெரியாமலே தம்பி கல்யாணம் பண்ணிக்கிறான் எப்படி
அண்ணனாவது தம்பியாவது போ man
பைத்தியம் போல தெறிது come'on
அண்ணனாவது தம்பியாவது
அண்ணனாவது தம்பியாவது
♪
அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே
♪
தாயும் பிள்ளையும் ஆன போதிலும்
வாயும் வயிறும் வேறடா
சந்தை கூட்டத்தில் வந்த மந்தையில்
சொந்தம் என்பதும் ஏதடா சொந்தம் என்பதும் ஏதடா
அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே
♪
பெட்டைக் கோழிக்கு கட்டு சேவலை
கட்டி வைத்தவன் யாரடா
அவை எட்டு குஞ்சுகள் பெத்தெடுத்ததும்
சோறு போட்டவன் யாரடா சோறு போட்டவன் யாரடா
வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதிலும்
வருந்தவில்லையே தாயடா
மனித ஜாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடா மனதினால் வந்த நோயடா
அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே
♪
வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய்
வந்து சேர்கிறார் பாரடா
கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை
மதித்து வந்தவர் யாரடா மதித்து வந்தவர் யாரடா
பணத்தின் மீதுதான் பக்தி என்றபின்
பந்த பாசங்மே ஏனடா
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
அண்ணன் தம்பிகள் தானடா அண்ணன் தம்பிகள் தானடா
அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே