歌曲 / 歌词

Kaiveesum

Listen on Apple Music

歌词

கை வீசும் காற்றே எங்கிருந்தாய்?
ஏதோ நீ சொல்ல ஏங்குகிறாய்
நீ பாதி முடிந்த பாடல் உன் கண்ணில் என்ன தேடல்
இரவானா வெயில் நீயா சருகான வாசம் நீயே
அழகே... ஆஅ
கை வீசும் காற்றே எங்கிருந்தாய்?
ஏதோ நீ சொல்ல ஏங்குகிறாய்
♪
காற்றலையா நினைவலையா நீ என்பது யாரது?
கண் சிமிட்டும் நட்சத்திரம் கண் கலங்கி மின்னுது
சின்ன, சின்ன வெண்ணிலா சிதறி போன மின்னலா
சோகம் கண்ணிலா
நீயும் இந்த மண்ணிலா நின்று போன தென்றலா
காயம் நெஞ்சிலா
கை வீசும் காற்றே எங்கிருந்தாய்?
ஏதோ நீ சொல்ல ஏங்குகிறாய்
♪
வார்த்தை இல்லா கவிதை உன்னை யார் கிழித்து போட்டது
வந்தது ஏன் பார்த்தது ஏன் என் இதயம் கேட்டது
என்ன சொல்ல எண்ணுதோ? தந்தை தாயி தேடுதோ?
வலிகள் கூடுதோ?
வாசம் தொலைத்த முல்லையோ? வாழ்க்கை உனக்கு இல்லையா?
தெய்வம் இல்லையா?
கை வீசும் காற்றே எங்கிருந்தாய்
ஏதோ நீ சொல்ல ஏங்குகிறாய்