歌曲 / 歌词

Unnaal Unnaal Un Ninaivaal

Listen on Apple Music

歌词

உன்னால் உன்னால் உன் நினைவால்
உலகில் இல்லை நான் தானே
உள்ளே கேட்கும் ஓசையிலே
உன்னை உன்னை கேட்டேனே
உன்னோடு சேர்ந்து நெடுந்தூரங்கள்
காலார நடந்து மிதந்தேனே
உன்னிடம் தந்த இதயத்தை தேடி
உன்னில் என்னை தொலைத்தேனே
♪
எந்தன் விழி ஓரங்கள்
உன் இமையில் சாயுதே
என் கண் கடை மூடினால்
உந்தன் முகம் தெரியுதே
என் பகல் உன் கண்ணில்
நீ இல்லை என்றாலே
நான் ஏதும் இல்லை இரவு தான்
நான் உன்னை உனக்கே தெரியாமல்
கொஞ்சம் கொஞ்சமாக படித்தேனே
பூமியில் உள்ள காதலை எல்லாம்
முன்னாள் வாழ்ந்தாய் ரசித்தேனே
♪
இன்னும் இன்னும் கனவுகள்
உன்னை பற்றி வேண்டுமே
என்னென்னமோ ஆசைகள்
உன் நினைவை தூண்டுமே
என் மழை காலங்கள்
என் வெயில் நேரங்கள்
எல்லாமே உன்னில் தொடங்குதே
ஒரே ஒரு புன்னகை போதும் அன்பே
உன்னக்கென காத்து கெடப்பேனே
ஆயிரம் கோடி ஆண்டுகள் தாண்டி
உன்னில் வாழ துடிப்பேனே