歌曲 / 歌词

Pudhu Suriyan

Listen on Apple Music

歌词

புது சூரியன் என் வீட்டிலே
அழகாகதான் விளையாடுதே
இரு தோளிலும் சுகம் கூடுதே
உன்னை தூக்கி நான் பசி ஆறுவேன்
அருகினில் வளரும் பிறையே
வளர்ந்தே பரவும் மழையே
வான் நிலவு திரையே
திரண்டே ஜொலிக்கும் அழகே
வா சிறந்த மொழியே
மடல்கள் திறந்த வழியே
நான் உடைந்த சிலையே
சிலையில் முளைக்கும் உயிரே
கடல் தாண்டி நீரும் போய் விடுமா
கரை தாண்டி மீனும் வாழ்ந்திடுமா
அனுதினம் உன்னை நினைக்கையில் மனம்
அணு அணுவாய் துடிக்குது வா
திருமுகம் தந்து சிறு விரல் கொண்டு
பெரு வழிகளை துடைத்திட வா
மறுபடி உன்னை மடியினில் பெற
கருவறை தவம் கிடக்குது வா
நீயின்றி நான் வாழ
ஆரம்பம் ஏதிங்கே
நீதானே நான் வாழ
ஆதரவா அன்பே
வான் தாண்டி சூரியனும்
தூரங்கள் போய்விடுமா
தாய் போல வாழ்வெல்லாம்
நியாங்கள் தோன்றுமா
தலை சாய்ந்திடு ஆராரிரோ
இமை மூடிடு ஆராரிரோ
தலை சாய்ந்திடு ஆராரிரோ
இமை மூடிடு ஆராரிரோ
அருகினில் வளரும் பிறையே
வளர்ந்தே பரவும் மழையே
வான் நிலவு திரையே
திரண்டே ஜொலிக்கும் அழகே
வா சிறந்த மொழியே
மடல்கள் திறந்த வழியே
நான் உடைந்த சிலையே
சிலையில் முளைக்கும் உயிரே
கடல் தாண்டி நீரும் போய் விடுமா...
கரை தாண்டி மீனும் வாழ்ந்திடுமா
கடல் தாண்டி நீரும் போய் விடுமா...
கரை தாண்டி மீனும் வாழ்ந்திடுமா