歌曲 / 歌词

Atrai Thingal Vanidam Allichennoo

Listen on Apple Music

歌词

பெண்: அற்றைத் திங்கள் வானிடம்
ஆண்: அல்லிச் செண்டோ நீரிடம்
பெண்: சுற்றும் தென்றல் பூவிடம்
ஆண்: சொக்கும் ராகம் யாழிடம்
பெண்: காணுகின்ற காதல் என்னிடம்
ஆண்: நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
ஆண்: அற்றைத் திங்கள் வானிடம்
பெண்: அல்லிச் செண்டோ நீரிடம்
ஆண்: சுற்றும் தென்றல் பூவிடம்
பெண்: சொக்கும் ராகம் யாழிடம்
ஆண்: காணுகின்ற காதல் என்னிடம்
பெண்: நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
பெண்: அடிதொட முடிதொட
ஆசை பெருகிட
நேரும் பலவித பரிபாஷை
ஆண்: பொடிபட பொடிபட
நாணம் பொடிபட
கேட்கும் மனதினில் உயிரோசை
பெண்: முடிதொட முகந்தொட
மோகம் முழுகிட
வேர்க்கும் முதுகினில் இதிகாசம்
ஆண்: உருகிடஉருகிட
ஏக்கம் உருகிட
கூடும் அனலிது குளிர்வீசும்
பெண்: குலுங்கினேன் உடல் கூசிட
கிறங்கினேன் விரல் நீந்திட
ஆண்: மயங்கினேன் சுகம் சேர்ந்திட
தளும்பினேன் எனை நீ தொட
பாய்ந்திட ஆய்ந்திட
பெண்: காணுகின்ற காதல் என்னிடம்
ஆண்: நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
ஆண்: அற்றைத் திங்கள் வானிடம்
பெண்: அல்லிச் செண்டோ நீரிடம்
ஆண்: சுற்றும் தென்றல் பூவிடம்
பெண்: சொக்கும் ராகம் யாழிடம்
ஆண்: உடலெது உடையெது
தேடும் நிலையிது
காதல் கடனிது அடையாது
பெண்: இரவெது பகலெது
தேடும் சுகமிது
சாகும் வரையிலும் முடியாது
ஆண்: கனவெது நினைவெது
கேட்கும் பொழுதிது
காமப் பசி இதுஅடங்காது
பெண்: வலமெது இடமெது
வாட்டும் கதையிது
தீண்டும் வரையிலும் விளங்காது
ஆண்: நடுங்கலாம் குளிர்வாடையில்
அடங்கலாம் ஒரு ஆடையில்
பெண்: தயங்கலாம் இடைவேளையில்
உறங்கலாம் அதிகாலையில்
கூடலில் ஊடலில்
ஆண்: காணுகின்ற காதல் என்னிடம்
பெண்: நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்