歌曲 / 歌词

Lullaby (Thaalaattu) Song

Listen on Apple Music

歌词

றாரோ றாரோ றாரோ றாரோ
றாரோ றாரோ றாரோ றாரோ
றாரோ றாரோ றாரோ றாரோ
கண்ணே என் கண்மணியே
கை வீசும் பைங்கிளியே
பூ போல கண் மலர்வாய்
என் மகனே
மடியில் வளரும் கர்ப்பூரமே
பூவே என் பூந்தளிரே
என் வாழ்வின் பால் நிலாவே
தேயாமல் நீ வளர்வாய்
என் மகனே
விழியில் தவழும் அற்புதமே
♪
றா றாரோ றாரோ றாரோ றாரோ
றா றாரோ றாரோ றாரோ றாரோ
றா றாரோ றாரோ றாரோ றாரோ
கிண்ணத்தில் பால் சோறு
அள்ளித்தான் நான் ஊட்ட
உண்ணும் இதழ் பார்த்து
உள்ளம் துள்ள
அன்பென்னும் ஊற்றிலும்
ஆனந்த காற்றிலும்
சாய்ந்தாடும் பூவாக
நீ வளர்வாய்
அன்பே என் ஆரமுதே
ஆனந்த பேரழகே
தேனே என் தேன் கனவே
கண்ணுறங்கா
♪
நீ வரும் வீதியில்
தேர் வரும் பொன் வேலை
இன்பங்கள் துள்ளாதோ
நீ நடந்தால்
கல் மீதும் முள் மீதும்
நோகாமல் நீ வா
அம்மாவின் வாழ்வில் என்றும் வேண்டும்
கண்ணான பூ மகனே
என் ஜீவன் நீதானே
வான் போல நீ எழுந்து
வா மகனே
மகனே, மகனே என் மகனே