歌词
கண்கள் ஓய
காலம் தேய
காயம் ஆறும் இங்கு பார்
ஊடல் தீர
கோலம் மாற
ஞானம் சேரும் இங்கு பார்
பார் பார் பார்
உள்ளே பார் பார் பார்
நீயும் கொஞ்சமாய் உள்ளே பார்
உற்று பார் தேடல் உன்னில் தான்
கொஞ்சம் எட்டி பார்
ரி ரி ரி ரி சா சா உள்ளே பார்
ரி ரி ரி ரி சா சா நீயும் பார்
ரி ரி ரி ரி சா சா உற்று பார்
ரி ரி ரி ரி சா சா எட்டி பார்
கண்கள் ஓய
காலம் தேய
காயம் ஆறும் இங்கு பார் பார் பார்
♪
நாளை வரும் நேரம்
நேற்று ஏதோ தரும் தலா பாரம்
நாளை வரும் நேரம்
பாவி நெஞ்சின் ஓரம் நேற்றில் பாரம்
சுவாசம் எங்கும் சேரும்
காற்று வந்த நேரம்
மூங்கில் பாடும்
நிழலில் ஆறுதல் ஆழினேன்
தினம் ஒரு நாடகம் ஆடினேன்
வழி நூறு பாதை தேடினேன்
புது உலகம் பழகியது
பழைய வலி விலகியது
நகருகிறேன் புரிகிறது
நில்லாமலே மாறிடவே
கண்கள் ஓய
காலம் தேய
காயம் ஆறும் இங்கு பார்
ஊடல் தீர
கோலம் மாற
ஞானம் சேரும் இங்கு பார்
ரி ரி ரி ரி சா சா உள்ளே பார்
ரி ரி ரி ரி சா சா நீயும் பார்
ரி ரி ரி ரி சா சா உற்று பார்
ரி ரி ரி ரி சா சா எட்டி பார்
பார் பார் நீயும் கொஞ்சமாய் உள்ளே
உற்று பார் தேடல் உன்னில் தான்
கொஞ்சம் எட்டி பார்