歌曲 / 歌词

Naan Mozhi Arindhaen

Listen on Apple Music

歌词

நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்
அன்று நான் வழி அறிந்தேன் உன் பாதையில்
நான் என்னை அறிந்தேன் உன் அருகிலே
நான் திசை அறிந்தேன் உன் விழியிலே
இன்று நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே
நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்
அன்று நான் வழி அறிந்தேன் உன் பாதையில்
♪
நல்லதொரு பூ வாசம் நான் அறிந்த வேளையில்
நந்த வனம் போன இடம் நான் அறியேன்
என்னுடைய ஆகாயம் கை சேர்ந்த வேளையில்
வெண்ணிலவு போன இடம் நான் அறியேன்
காற்றை போல வீசியவள்
கையை வீசி போனதெங்கே
ஊற்றை போல பேசியவள்
ஊமை ஆகி போனதெங்கே
வாழ்வை மீட்டு கொடுத்தவளே
நீயும் தொலைந்து போனதெங்கே
நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்
அன்று நான் வழி அறிந்தேன் உன் பாதையில்
♪
கண்ணிமையில் ஒரே ஆசை ஊஞ்சலிடும் வேளையில்
உண்மைகளை உள்மனதில் காண்பதில்லை
புன்னகையில் நான் தூங்க ஆசை பட்ட வேளையில்
முள் மடியில் தூங்கும் நிலை ந்யாயம் இல்லை
மேகம் நீங்கி போகும் என
நீல வானம் நினைப்பதில்லை
காலம் போடும் வேலிகளை
கால்கள் தாண்டி நடப்பதில்லை
வாழ்ந்து போகும் வாழ்க்கையிலே
நமது கையில் ஏதும் இல்லை
நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்
அன்று நான் வழி அறிந்தேன் உன் பாதையில்
நான் என்னை அறிந்தேன் உன் அருகிலே
நான் திசை அறிந்தேன் உன் விழியிலே
இன்று நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே
நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்
அன்று நான் வழி அறிந்தேன் உன் பாதையில்