歌曲 / 歌词

Un Swaasam

Listen on Apple Music

歌词

உன் சுவாசம் என் மீது விழுகையில்
உள் நெஞ்சில் தீ ஒன்று எரிகையில்
அன்பே விழுந்தேன்
உன்னுள் தொலைந்தேன்
உன் பார்வை என் மீது படுகையில்
உனக்காக என் நாட்கள் விடிகையில்
மீண்டும் பிறந்தேன்
என்னை மறந்தேன்
பட பட படவென மை விழி பேசிட
மனசுக்குள் மழை துளி குதிக்கிறதே
தட தட தடவென கட கட கடவென
இதயத்தில் ரயில் ஒன்று கடக்கிறதே
எரிமலை பனிமலை
இரண்டுக்கும் நடுவிலே
என்னை இன்று நிறுத்துகிறாய்
கண்ணில் வெயில் காலம்
நெஞ்சில் மழை காலம்
அள்ளி தந்தாயே உயிரே
ஓ உன் சுவாசம் என் மீது விழுகையில்
உள் நெஞ்சில் தீ ஒன்று எரிகையில்
அன்பே விழுந்தேன்
உன்னுள் தொலைந்தேன்
Yo baby girl
நீ வந்தாலே போதுமே
என் கஷ்டமெல்லாம் சந்தோசம் ஆகுமே
விலகி விலகி என்ன விட்டுட்டு போகாதே
முத்தம் ஒன்று கொடுத்தால் கொறஞ்சி போகாதே
Keep in your heart
You're a சண்டை கோழி
Oh ho boy anytime I'm your செல்ல கோழி
Oh ho இதயம் துடித்திட சுவாசம் ஆனாயே
Yeah come-on
உன்னால் திண்டாடினேன்
ஐயோ தள்ளாடினேன்
பெண்ணே போராடினேன்
ஆனால் கொண்டாடினேன்
குழந்தையும் குமரியும் இணைந்தவள்
இவளென என் மனம்
உன்னை கண்டு ரசிக்கிறதே
கோபத்தில் சிவந்திடும்
கன்னத்தை பார்க்கையில்
குறும்புகள் செய்திட பிடிக்கின்றதே
தடயங்கள் தெரிந்துமே சாட்சிகள் இருந்துமே
என்னை எங்கு கடத்துகிறாய்
கண்ணில் வெயில் காலம்
நெஞ்சில் மழை காலம்
அள்ளி தந்தாயே உயிரே
ஓ உன் சுவாசம் என் மீது விழுகையில்
உள் நெஞ்சில் தீ ஒன்று எரிகையில்
அன்பே விழுந்தேன்
உன்னுள் தொலைந்தேன்
♪
பெண்ணே உன் யோசனை
காற்றில் பூ வாசனை
கையில் தந்தேன் என்னை
ஏற்றால் என்னை அன்னை
தினம் தினம் கனவினில் நீ வர தானடி
கண்களை மூடி நான் தூங்குகிறேன்
மனசுக்குள் உனக்கென மாளிகை அமைத்திட
நிலவினில் கற்களை வாங்குகிறேன்
திரி இல்லை தீ இல்லை
புன்னகை வீசிடும்
பார்வையில் கொளுத்துகிறாய்
கண்ணில் வெயில் காலம்
நெஞ்சில் மழை காலம்
அள்ளி தந்தாயே உயிரே
உன் சுவாசம் என் மீது விழுகையில்
உள் நெஞ்சில் தீ ஒன்று எரிகையில்
அன்பே விழுந்தேன்
உன்னுள் தொலைந்தேன்
உன் பார்வை என் மீது படுகையில்
உனக்காக என் நாட்கள் விடிகையில்
மீண்டும் பிறந்தேன்
என்னை மறந்தேன்...