歌曲 / 歌词

Mazhai

Listen on Apple Music

歌词

மழை நனைய வைத்தது ஒரு நாள்
அதில் மயங்கினேன்
அலை கரையை தீண்டிய திருநாள்
மனம் கிரங்கினேன்
உன்னை நான் பார்த்த முதல் நாள்
வீழ்ந்தேனே எதனால்
உன் கண் என்னும் சிறகினால்
அள்ளி அணைத்ததால் நெஞ்சோடு
அன்றோடு ஆசை கோபம்
அனைத்திலும் நீதான்
ஆவேசம் வந்தால் கூட
அடங்கும் தீ தான்
அன்பே நீ யாரோடா
அலாதி தேரோடா
மழை நனைய வைத்தது ஒரு நாள்
அதில் மயங்கினேன்
அலை கரையை தீண்டிய திருநாள்
மனம் கிரங்கினேன்
♪
எழில் முகம் காணாமல்
என்ன வென்றும் கேளாமல்
எதிரியாய் ஆனதென்ன
முறுவல்கள் தாராமல்
முத்தமிட வாராமல்
ஏங்க வைத்து போனதென்ன
வழிகள் எனது
விழிகள் எனது
வரவு உனதல்லவா
மனது உனது
மறதி உனது
மரணம் எனதல்லவா
மேகம் நீங்க
வானம் தாங்க
நிலா உலா வராதோ
மழை நனைய வைத்தது ஒரு நாள்
அதில் மயங்கினேன்
அலை கரையை தீண்டிய திருநாள்
மனம் கிரங்கினேன்